காஜல் அகர்வாலின் புதிய புகைப்படம் வைரல்!
Kajal Aggarwal, Tamil Cinema 07-Apr-2022: கோடையில் கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால்-கெளதம் கிட்சலு தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்று பெயர் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது அறிந்ததே.

இந்த நிலையில் குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது மீண்டும் கிளாமருக்கு மாறி பதிவு செய்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து 6 லட்சத்துக்கும் மேலான லைக்குகளை வாரி வருகிறது.

இந்த புகைப்படத்தின் கேப்ஷனில் “கோடைக்காலம் போல் உணர்கிறேன், அதிக வெப்பநிலை” என பதிவு செய்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த கிளாமர் புகைப்படம் பதிவுக்கு குறித்த நேரத்துக்குள் பலலட்சம் லைக்குகள் குவிந்த நிலையில், அதில் காஜல் அகர்வாலின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான நடிகை அனுஷ்கா ஷெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.