பிரபல தமிழ் நடிகர் விமானம் ஓட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்!
Vinay Rai, Vimala Raman, Tamil Cinema 07-Apr-2022: தமிழ் சினிமாவின் நடிகர்களில் அஜித் மட்டுமே விமானம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருப்பதாகவும் அவர் விமானத்தை சர்வசாதாரணமாக ஓட்டுவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நடிகை மாதவியும் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்று உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் வினய், விமானம் ஓட்டும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தளங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு வினய்யை திருமணம் செய்ய போகும் நடிகை விமலா ராமன், உங்கள் கனவு நிஜமாகிவிட்டது என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு ‘உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய். அதன் பிறகு தொடர்ந்து ‘ஜெயம்கொண்டான்’, ‘மிரட்டல்’, ‘என்றென்றும் புன்னகை’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த வினய், மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அதன்பின்னர் ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களிலும் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பதும் தற்போது அவர் அதிகம் நெகட்டிவ் ரோலில் தான் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
