ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது இணையத்தில்
Aishwarya Rajinikanth, Dhanush, Tamil Cinema 07-Apr-2022: சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினியின் மகன் வேத் பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரஜினி குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சௌந்தர்யா மகன் வேத் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஹாப்பி ஹாப்பி பர்த்டே மை டார்லிங் டால்! பெரியம்மாவின் அன்பு உனக்கு எப்போதும் உண்டு. கடவுள் உனக்கு எல்லா வளமும் மகிழ்ச்சியும் கொடுக்கட்டும்’ என்று வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரன் வேத் பிறந்தநாள் அன்று குடும்பத்துடன் கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.