‘விருமன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டை அறிவித்த கார்த்தி! எதிர் பார்ப்பில் ரசிகர்கள்

விருமன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தேதி அறிவித்த நடிகர் கார்த்தி!

Karthi, Prakash Raj, Viruman, Tamil Cinema 07-Apr-2022: முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன், இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Karthi, Prakash Raj, Viruman, Tamil Cinema 07-Apr-2022

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karthi, Prakash Raj, Viruman, Tamil Cinema 07-Apr-2022 001

இப்படத்தில் கார்த்தியுடன், அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.