‘வெந்து தணிந்தது காடு’ வெளியான சிங்கிள் பாடல்! குவியும் பார்வையாளர்கள்

சிம்பு படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது

Vendhu Thanindhathu Kaadu, Silambarasan TR, Siddhi Idnani, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate Tamil, Tamil Cinema 07-Apr-2022: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிபில், இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்த காடு படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Vendhu Thanindhathu Kaadu, Silambarasan TR, Siddhi Idnani, Kayadu Lohar, Tamil Cinema 07-Apr-2022

இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் துவக்கப்பாட்ட நிலையில் முதல் கட்டமாக சிங்கிள் பாடலை வெளியிடட்டுள்ளனர்.

‘காலத்துக்கும் நீ வேணும்’ என்று இந்த பாடலை கவிஞர் தாமரை எழுத, சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மெலடி இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

‘வெந்து தணிந்த காடு’ படத்தின் அடுத்தடுத்து ஒவ்வொரு அப்டேட் களையும் படக்குழு வெளியிடும்போது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.