விஜய் சேதுபதி-அரவிந்த் சாமி நடிப்பில் மீண்டும் ஓர் பேசும் படம்! செம அப்டேட்

35 ஆண்டுகளின் பின் விஜய் சேதுபதி-அரவிந்த் சாமி கூட்டணியில் மீண்டும் ஓர் பேசும் படம்!

Vijay sethupathi, Arvind Swamy, Tamil Cinema 06-Apr-2022: கமல் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு ‘பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத படம் வெளிவந்த நிலையில், தற்போது 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற ஒரு ‘பேசும் படம்’ தமிழில் உருவாகவுள்ளது.

Vijay sethupathi, Arvind Swamy, Tamil Cinema 06-Apr-2022

கடந்த 2018 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதிராவ் மூவரும் நடித்திருந்ததை தொடர்ந்து தற்போது ‘காந்தி டாக்ஸ்’ எனும் படத்தில் இந்த மூவரின் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர் எனப்வர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் வசனமே இல்லை என்பதுதான் புதிய முயற்சி. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் அமலா நடிப்பில் உருவான ‘பேசும் படம்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது உருவாக இருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ படமும் அதே போன்று நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay sethupathi, Arvind Swamy, Tamil Cinema 06-Apr-2022 001

சீரியஸான சமூக பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கேலியும் கிண்டலுமாக உருவாக்கப்பட இருக்கும் இத்திரைப்படத்தை ‘ஜீ ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.