‘குக் வித் கோமாளி’ சேட்டுக்குள் நுழையும் கலக்கல் நடிகர்
Cook With Comali, Cook With Comali 3, Sivakarthikeyan, Don, Tamil Cinema 06-Apr-2022: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது 3 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராகுல் தாத்தா, மனோபாலா, அந்தோணி தாசன், சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா ராமன், ரோஷினி, ஸ்ருதிகா, கிரேஸ், அம்மு அபிராமி, தர்ஷன் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்த நிலையில் இதுவரை நான்கு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் முத்துகுமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளமை நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.
அதை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் தனது ‘டான்’ படத்தின் குழுவினர்களோடு வருகை தரயிருப்பதாகவும், மற்றும் ‘டான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாகவும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘டான்’ படத்தில் நடித்த ஷிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் இருப்பதால் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சீசன் 3 இல் கலந்து கொள்ள இருப்பதால் பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.