சுசீந்திரன் இயக்கும் பான்-இந்தியா திரைப்படத்தின் ஹீரோ! மாஸ் தகவல்

பிரபல நடிகரை இயக்கும் சுசீந்திரனின் புதியப்படம்

Vijay Antony, Sathyaraj, Tamil Cinema 06-Apr-2022: சுசீந்திரன் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வீரபாண்டியபுரம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து ‘குற்றம் குற்றமே’ என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

Vijay Antony, Sathyaraj, Tamil Cinema 06-Apr-2022

இவரின் இயக்கத்தில் அடுத்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகனாக பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும், மேலும் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vijay Antony, Sathyaraj, Tamil Cinema 06-Apr-2022

மேலும் சூப்பர்ஹிட்டான தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரட்னலு’ என்ற படத்தில் நாயகியாக நடித்த ஃபரிதா அப்துல்லா இந்த படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது .

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 16 ஆம் தேதி திண்டுக்கல், கோபிசெட்டிபாளையம், காரைக்குடி, கொடைக்கானல், ஊட்டி மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மற்றும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்க, விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.


Posted

in

by