இசை ஜாம்பவானின் மகள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
A.R. Rahuman, Tamil Cinema 06-Apr-2022: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் திருமண புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீயாக வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்தமகள் கதிஜாவுக்கும் சவுண்ட் இன்ஜினியரிங் ரியா ஷேக் முகமது அவர்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளின் திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் , அவரது மனைவி சாய்ரா பானு, இளையமகள் ரஹிமா, மகன் அமீன் மற்றும் திருமண தம்பதிகளான கதிஜா, ரியா ஷேக் முகமது உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் அருகில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த அம்மாவின் புகைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
