சமந்தா படத்தின் வெளியான முதல் கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்கள் எதிர்பார்ப்பில்

சமந்தாவின் அடுத்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வைரல்!

Yashoda, Samantha Ruth Prabhu, Tamil Cinema 05-Apr-2022: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதில் சமந்தாவின் கதாபாத்திரம் அனைவரின் மத்தியிலும் ஒரு பேசுபொருளாக காணப்பட்டது. அந்தளவுக்கு சமந்தா தனது நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டி இருந்தார்.

Yashoda, Samantha Ruth Prabhu, Tamil Cinema 05-Apr-2022

அந்நிலையில் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் தயாரிப்பாளருக்கு திருப்பதியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் சமந்தாவின் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ‘யசோதா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சற்றுமுன் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Yashoda, Samantha Ruth Prabhu, Tamil Cinema 05-Apr-2022 001

மற்றும் சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.