குழந்தையுடன் கடற்கரையில் பிகினி உடையில் விளையாடும் பிரபல நடிகை
Shriya Saran, Tamil Cinema 05-Apr-2022: தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இந்நிலையில் நீச்சல் உடை அணிந்துகொண்டு தனது கணவர், குழந்தையுடன் கடற்கரையில் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். அதன் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, தனுஷ், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

பின்னர் ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மேலும் கொரோனா ஊரடங்கில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த இவர் சமீபத்தில் இந்தத் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
தற்போது கணவர், குழந்தை என செட்டில் ஆன பிறகும் நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சமூகவலைத் தளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரேயா தற்போது கடற்கரையில் தனது குழந்தையுடன் நீரில் விளையாடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கவர்ச்சியான நீச்சல் உடையுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்வதோடு லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்கள். இவர் பதிவிட்ட புகைப்படங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.