ரோபோ சங்கர் மீது மைக்கால் எறித்ததற்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
R. Parthiban, Robo Shankar, Iravin Nizhal, Tamil Cinema 05-Apr-2022: பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற போது திடீரென மைக் வேலை செய்யவில்லை என மைக்கை பார்த்திபன் தூக்கி எறிந்தார். அவர் தூக்கி எறிந்த மைக், ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ரோபோ சங்கர் மீது விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது அறிந்ததே. இந்நிலையில் தற்போது தான் தூக்கி எறிந்த மைக் ரோபோ சங்கர் மீது பட்டதை அடுத்து ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்து மன்னிப்பு கூறியுள்ளார்.
இது குறித்து தனது ஸ்டைலில் பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டதாவது, “மைக்கை கண்டுபிடித்தவர் ஈமைல் பெர்லினர்… மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர்… மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ண பார்த்திபன்.. முடிவில் முத்தமிட்டவர்” என பதிவு செய்துள்ளார். மேலும் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Mike testing 1..2..3…@iamrobosankar #iravinnizhal #singleshotfilm #arrahman #singlerelease #maayavachayava #maayavathooyava #iravinnizhallyricalvideo #iravinnizhalfirstsingle #iravinnizhalteaser pic.twitter.com/Oynovni1Gm
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 4, 2022