நடிகர் மாதவன் படத்துக்கு கிடைத்த பெருமை
Rocketry, R. Madhavan, Simran, Tamil Cinema 05-Apr-2022: நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துவரும் திரைப்படம் ‘ராக்கெட்டரி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டு இருப்பது தமிழ் சினிமாவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் மே மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு இந்த படம் திரையிடப்படும் என்றும், இந்த படத்தை சர்வதேச பிரபலங்கள் பார்க்க உள்ளதாகவும் தகவல்கள் தெருவிக்கின்றன.
மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்ட உடன் இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக்கப்பட்டு, இந்த படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளதோடு இப்படத்தை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளில் ஜூலை 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்படுவது படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நடிகர் மாதவன் கூறுகையில், ‘நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்றும் இந்த படத்தை தயாரிக்கும் போது இவ்வளவு பெரிய விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று நான் நம்பவில்லை என்றும் கடவுள் அருளால் இந்த படத்திற்கு நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றும் இந்த படம் இந்தியாவை பெருமைப்படுத்தும்’ என்றும் கூறியுள்ளார்.