பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் விஜய்யின் பாணியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்
Shah Rukh Khan, vijay, Tamil Cinema 05-Apr-2022: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், உருவான ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

அந்நிலையில் விஜய் வான் மீது ஏறி ரசிகர்கள் பட்டாளத்துடன் ஒரு செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தார். அந்த புகைப்படம் அந்த ஆண்டின் அதிக லைக்ஸ் மற்றும் ரீடுவிட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தனது வீட்டின் முன் குவிந்த ஏராளமான ரசிகர்களுடன் செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். நேற்றைய முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து கூற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

அந்த வேளை அவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஷாருக்கான் அவர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 28 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர்.