தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணையும் அண்டை மாநில சூப்பர் ஸ்டார்
Thalaivar 169, Rajinikanth , Aishwarya Rai, Sivakarthikeyan, Tamil Cinema 05-Apr-2022: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘தலைவர் 169’ திரைப்படத்தில் அண்டை மாநில சூப்பர் ஸ்டார் இணைய உள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

‘தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்த பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், ரஜினியின் மகளாக ப்ரியங்கா அருள்மோகன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் நெல்சன் சிவராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றது.
மற்றும் சிவராஜ்குமாரின் தந்தை நடிகர் ராஜ்குமார், ரஜினியின் நெருங்கிய நண்பர் என்ற நிலையில் ‘தலைவர் 169’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் இணைவதால் கர்நாடகாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.