பிரபல நடிகை ஒருவர் கண் தானம் செய்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது
Varsha Bollamma, Vijay, Vijay Sethupathi, Tamil Cinema 04-Apr-2022: கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதுரன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ திரைப்படத்தில் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார்.

கர்நாடகாவின் குடகு மலையில் பிறந்த வர்ஷா பொல்லம்மா பெங்களூரில் கல்லூரி படிப்பை முடித்துக்கொண்டு திரைப்படங்களில் நாட்டம் செலுத்த தொடங்கிய வேளை சதுரன் படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து விஜய் சேதுபதியின் ’96’, விஜயின் பிகில் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மேலும் பிகில் திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படத்தில் வர்ஷா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப் பட்டதை அடுத்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.