‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ சமந்தாவிற்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகை! அநியாயத்திற்கு தவறவிட்டுள்ளார்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை

Trisha, Samantha, Nayanthara, Kaathuvaakula Rendu Kaadhal 04-Apr-2022: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது மட்டுமின்றி, வசூலிலும் தயாரிப்பாளருக்கு திருப்தியை கொடுத்துள்ளது.

Trisha, Samantha, Nayanthara, Kaathuvaakula Rendu Kaadhal 04-Apr-2022 001

மேலும், கதீஜா கேரக்டரில் நடித்த சமந்தாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பதும், அந்த அளவுக்கு அவர் அந்த கேரக்டரில் மிக சிறப்பாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலில் கதீஜா கேரக்டருக்கு த்ரிஷாவை நடிக்க வைக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவருக்கான தேதிகள் கிடைக்காததால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போனதால், அவர் சமந்தாவிடம் இந்த கேரக்டர் பற்றி பேசியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

Trisha, Samantha, Nayanthara, Kaathuvaakula Rendu Kaadhal 04-Apr-2022

மற்றும் சமந்தாவும் தெலுங்கில் பிசியாக இருந்த நிலையில் நயன்தாரா தான் அவருடன் பேசி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.