தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குவது இந்த குணசித்ர நடிகரா!

குணசித்திர நடிகர் தமிழக முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க முன்வந்துள்ளார்

M. K. Stalin, Bose Venkat 04-Apr-2022: இந்திய திரையுலகில் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் எடுப்பது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்நிலையில் தோனி, சச்சின், ஜெயலலிதா உள்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

K. Stalin, Bose Venkat 04-Apr-2022

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபல குணசித்ர நடிகர் போஸ் வெங்கட் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இதற்காக அவர் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

M. K. Stalin, Bose Venkat 04-Apr-2022

இந்த படத்தின் கதை எழுதும் பணியை அஜயன்பாலா மேற்கொண்டு வருவதாகவும், தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேரக்டரில் சமுத்திரகனி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இப்படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.