‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பின்னணி இசை வீடியோ வைரல்! மாஸ் அப்டேட்

பின்னணி இசையில் பின்னும் பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan, Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai, Tamil Cinema 04-Apr-2022: பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan, Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai, Tamil Cinema 04-Apr-2022

இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தீவிரமாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சிக்கு டிரம்ஸ் இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் போது பின்னணி இசையில் ஏ.ஆர். ரகுமான் மிரட்டியிருப்பார் என்று தெரிய வருவதாக ரசிகர்கள் அதிகம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.