அஜித்திடம் கோரிக்கை வைத்த திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர்
Ajith Kumar, Siva, AK 61, Tamil cinema 03-Apr-2022: எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து மறுபடியும் எச். வினோத்-அஜித் கூட்டணியில் AK-61 உருவாகிவருகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதை வங்கி கொள்ளையை மையப்படுத்தி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்றும் ‘AK-61’ படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி” ‘AK-61’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் நடத்தி வருவதால் தமிழ்நாட்டில் இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் படப்பிடிப்பை சென்னையில் நடத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.