‘வாடிவாசல்’ படத்திற்கு முன் வெற்றி பட இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா! மாஸ் அப்டேட்

சூர்யா மறுபடியும் இணையும் வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படம்

Suriya, T.J. Gnanavel, Tamil Cinema 03-Apr-2022: தற்போது சூர்யா பாலா இயக்கும் பெயரிடப்படாத ‘சூர்யா 41’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suriya, T.J. Gnanavel, Tamil Cinema 03-Apr-2022

மேலும் இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டதும், இந்த படத்திற்கான சோதனை படப்பிடிப்பும் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் அறிந்ததே.

இந்த நிலையில் வெற்றிமாறன் இன்னும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பையே முடிக்காது இருப்பதனால் ‘வாடிவாசல்’ படத்தை தொடங்குவதற்கு முன்பு ஒரே மாதத்தில் ஒரு குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

Suriya, T.J. Gnanavel, Tamil Cinema 03-Apr-2022 001

சூர்யா நடிப்பில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அந்த படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் சூர்யா இணைய உள்ளதாகவும், இந்த படமும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் சூர்யா-ஞானவேல் இணைய உள்ள புதிய படத்தின் செய்தியால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.