சிரஞ்சீவி-பிரபுதேவா கூட்டணியின் படம் பற்றிய அதிரடியானா அறிவிப்பு!

சிரஞ்சீவியுடன் இணையும் பிரபுதேவா படம் பற்றிய மாஸான அறிவிப்பு

Prabhu Deva, Chiranjeevi, Salman Khan, Tamil Cinema 03-Apr-2022: சிரஞ்சீவி, ராம் சரண் நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிரஞ்சீவி தற்போது ‘காட்பாதர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Prabhu Deva, Chiranjeevi, Salman Khan, Tamil Cinema 03-Apr-2022

இந்நிலையில் இப்படம் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவான ‘லூசிபர்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மற்றும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இணைந்து நடனமாட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhu Deva, Chiranjeevi, Salman Khan, Tamil Cinema 03-Apr-2022 001

இந்த அறிவிப்பை இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் அவரது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

இத்தகவல் சிரஞ்சீவி ரசிகர்கள் மற்றும் பிரபுதேவா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.