நடிகை குஷ்பூ தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்! தாயாரின் புகைப்படம் வைரல்

குஷ்பூ தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்

Kushboo, Tamil Cinema 03-Apr-2022: தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் மற்றும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு என்பதும், அந்த காலங்களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் என்பதும், தற்போது அவர் பாஜக பிரமுகராக உள்ளார் என்பதும் அறிந்ததே.

Kushboo, Tamil Cinema 03-Apr-2022

மேலும் நடிகை குஷ்பு தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அதில், அவ்வப்போது அவரது குடும்ப புகைப்படங்கள் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளையும் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது தாயாரின் 78-வது பிறந்தநாள் குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் தன் தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Kushboo, Tamil Cinema 03-Apr-2022

இதுவரை பெரும்பாலானவர்கள் குஷ்பூவின் தாயாரை பார்த்ததில்லை என்ற நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குஷ்புவின் தாயாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.