புகழ்-அம்மு அபிராமி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு
Pugazh, Ammu Abhirami, Cook with Comali, Tamil Cinema 03-Apr-2022: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர் தமிழ் சினிமாவில் நடித்துவரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் பல படங்களில் நடித்து வருருக்கிறார். மற்றும் ஹீரோவாக நடிக்கவும் களமிறங்கியிருக்கிறார்.

அந்த வகையில் புகழ் Mr. Zoo Keeper என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது புகழ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அம்மு அபிராமி இனைய இருக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா நேற்று திருப்பூரில் நடைபெற்றது. அதில் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். மற்றும் இந்த படத்திற்கு ‘பாலமுருகனின் குதூகலம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் புகழ் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பும் திருப்பூரில் நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.