‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் பார்த்து சிம்ரன் தெரிவித்த கருத்து! விக்னேஷ் சிவனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

விக்னேஷ் சிவனை நெகிழவைத்த சிம்ரன்

Kaathuvaakula Rendu Kaadhal, Vijay sethupathi, Nayanthara, Samantha, Tamil Cinema 03-Apr-2022: சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு ஒரு சிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் படம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் வசூலிலும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Kaathuvaakula Rendu Kaadhal, Vijay sethupathi, Nayanthara, Samantha, Tamil Cinema 03-Apr-2022

இப்படத்தை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் படக்குழுவுக்கு தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் நடிகை சிம்ரனும் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தை பார்த்து அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, “விக்னேஷ் சிவன் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். வழக்கத்துக்கு மாறான ஒரு கதையை சரியாக படமாக்க வேண்டும் என்றால் அது விக்னேஷ் சிவனால் மட்டுமே முடியும். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம்” என்றும் மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)