நீச்சல் குளத்தின் அடியில் கையில் தேநீர் கோப்பையுடன் வித்யூலேகா! வீடியோ வைரல்

நீச்சல் குளத்தில் நீருக்குள் வித்யூலேகா புதிய வீடியோ

Vidyullekha Raman, Tamil cinema 03-Apr-2022: காமெடி நடிகையாக அறிமுகமாகிய வித்யூலேகா தனது வித்தியாசமான விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Vidyullekha Raman, Tamil cinema 03-Apr-2022

கௌதம் மேனனின் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வித்யூலேகா. இவர் தற்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட வித்யூலேகா அவரின் தனிப்பட்ட திறமையால் உடலிடையை குறைத்து அனைவரையும் வியக்க வைத்திருப்பது மட்டுமின்றி , இன்ஸ்டாகிராமில் அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் மாறுபட்ட விடியோக்கள் போன்றவற்றை பதிவேற்றி அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

ஏற்கனவே நீச்சல் குளத்தினுள் இருந்தவாறு ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் நீருக்குள் தேநீர் கோப்பையுடன் நிற்பதுபோல் ஒரு வீடியோவையும் பதிவேற்றியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Vidyullekha / Vidyu Raman (@vidyuraman)