‘தளபதி 66’ படப்பிடிப்பின் போது விஜய்! வீடியோ வைரல்

தளபதி விஜயின் புதிய வீடியோ இணையத்தில் வைரல்!

Thalapathy 66, Vijay , Tamil Cinema 03-Apr-2022: விஜய் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் ‘தளபதி 66’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் விமான நிலையம் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களால் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy 66, Vijay , Tamil Cinema 03-Apr-2022

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘தளபதி 66’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனை அடுத்து மே 3 ஆம் தேதி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. அதை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விஜய் நடந்து சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் வரை நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.