‘பிக்பாஸ்’ ஸ்மோக்கிங் ரூமில் நடந்த உண்மையை போட்டுடைத்த அபிராமி!

‘ஸ்மோக்கிங் ரூமில் நடந்தது இது தான்’ அபிராமியின் தகவல்

Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Non Stop, Abhirami Venkatachalam 30-Apr-2022: விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது பிக்பாஸ். அந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூமில் பாலாஜி முருகதாஸ் மற்றும் அபிராமி நடந்தது குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதன் உண்மையை அபிராமி கூறியுள்ளார்.

Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Non Stop, Abhirami Venkatachalam 30-Apr-2022

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜியும் அபிராமியும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஸ்மோக்கிங் ரூமில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டதாகவும் சிலர் வதந்திகளைப் பரப்பியிருந்தனர்.

இந்நிலையில் அபிராமி தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, அதில் ஒருவர் ‘ஸ்மோக்கிங் ரூமில் உண்மையில் அப்படி என்னதான் நடந்தது?’ என்று ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு அபிராமி, ‘அங்கே ஒன்றுமே நடக்கவில்லை, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நானும் சமூக வலைதளங்களில் சில விஷயங்களை பார்த்தேன்.

Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Non Stop, Abhirami Venkatachalam 30-Apr-2022 01

மேலும் கூறுகையில் ‘லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு ஷோவில் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் யாராவது அப்படி நடந்து கொள்வார்களா?’ என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பிராங்க் ஆக பதில் கூறியுள்ளார்.