விஜய் சேதுபதி- ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு 2’ படத்தின் வெளியான டீசர்! வேற லெவல்

பட்டைய கிளப்பும் பிசாசு 2 படத்தின் டீஸர்!

Pisasu 2, Vijay Sethupathi, Andrea Jeremiah 30-Apr-2022: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா நடித்த ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Pisasu 2, Vijay Sethupathi, Andrea Jeremiah 30-Apr-2022

ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசரில் முழுக்க முழுக்க திகில் காட்சிகளே அதிகம் இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிசாசு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்க படுகின்றது.

Pisasu 2, Vijay Sethupathi, Andrea Jeremiah 30-Apr-2022 001

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கௌரவ வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவும் கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.


Posted

in

,

by