சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ‘பிரைவேட் பார்ட்டி’ பாடல் வெளியீடு! செம அப்டேட்

வெளிவந்த ‘டான்’ படத்தின் ‘பிரைவேட் பார்ட்டி’ பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு!

Sivakarthikeyan, Priyanka Mohan, Sivaangi Krishnakumar, Don 29-Apr-2022: சி.பி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்த படம் மே 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Sivakarthikeyan, Priyanka Mohan, Sivaangi Krishnakumar, Don 29-Apr-2022

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் ‘சனிக்கிழமை என்றாலே பார்ட்டிதான், எனவே நாளை சனிக்கிழமை டான்’ படத்தின் ‘பிரைவேட் பார்ட்டி’ என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மற்றும் சி.பி சக்கரவர்த்தி இயக்கும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. என்பதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.