விக்னேஷ் சிவன் நயன்தாரா குறித்து பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது
Nayanthara, Vignesh Shivan, Vijay Sethupathi, Kaathu Vaakula Rendu Kadhal, Tamil Cinema 29-Apr-2022: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நயன்தாராவுக்காக உருகி உருகி விக்னேஷ் சிவன் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில், அன்புள்ள தங்கமே! மற்றும் நீ என் கண்மணி! நீ எனக்காக இருப்பதும், என் முதுகில் தட்டி கொடுப்பதும், என் வாழ்க்கையின் அசைக்க முடியாத தூணாக இருக்கிறாய் என்பதும் எனக்கு புரிகிறது என்றும், ஒவ்வொரு நிலைமையிலும் நான் தாழ்வாக நினைக்கும் பொது நீ என்னுடன் இருந்திருக்கிறாய் என்று மனம் திறந்து பதிவிட்டிருக்கிறார்.
மேலும் இந்த படமும் நீதான், என்னுடைய வெற்றிக்கு நீதான் கரணம் என்றும் நயன்தாராவை பெருமை படுத்தி பதிவிட்டுள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.