‘விக்ரம்’ படத்தின் ப்ரோமோஷன் பற்றி நெகிழ்ச்சியுடன் கமல் பதிவு!
Vikram, Kamal Haasan, Vijay Sethupathi 29-Apr-2022: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் அதிகளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர். விஸ்வரூபம் படத்துக்கு பிறகு நீண்ட இடைவேளையின் பின் தற்போது விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை வரும் மே மாதம் 18 ஆம் தேதி பிரான்சில் நடைபெறும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன்களில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் சில ரயில்களின் வெளிப்புற பகுதியில் விக்ரம் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. pic.twitter.com/S07AzG9TCr
— Kamal Haasan (@ikamalhaasan) April 28, 2022