விஜய்-அஜித் பட வில்லன் நடிகர் காலமானார்! திரையுலகினர் இரங்கல்

பிரபல வில்லன் நடிகர் காலமாகியது திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Vijay, Ajith, Salim Ghouse, Tamil Cinema 28-Apr-2022: தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் சலீம் கௌஸ் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vijay, Ajith, Salim Ghouse, Tamil Cinema 28-Apr-2022

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபு நடிப்பில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘வெற்றிவிழா’ என்ற திரைப்படத்தில் ‘ஜிந்தா’ என்ற கேரக்டர் மூலம் வில்லனாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் சலீம் கெளஸ்.

இதனையடுத்து ‘தர்மசீலன்’, ‘திருடா திருடா’, ‘சின்னக்கவுண்டர்’, ‘ரெட்’ ‘வேட்டைக்காரன்’ போன்ற பல படங்களில் நடித்திருப்பதுடன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சலீம் கெளஸ் உடல் நலக்குறைவால் இன்று காலமானதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.