வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் தகவல்
Adhigaaram, Raghava Lawrence, Vetrimaran, Tamil Cinema 28-Apr-2022: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெற்றிமாறன் கதையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘அதிகாரம்’. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ மற்றும் தனுஷின் ‘கொடி’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று தயாரிப்பு நிறுவனமான ‘பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி’ நிறுவனம் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘அதிகாரம்’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார்கள்.
மேலும் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் மற்றும் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உடன் இணைந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.