காத்துவாக்குல ரெண்டு காதல் – திரை விமர்சனம்

Kaathu Vaakula Rendu Kadhal 28th Apr 2022

Kaathu Vaakula Rendu Kadhal, Vijay Sethupathi, Nayanthara, Samantha,Tamil Cinema 28th Apr 2022 : ஹீரோ விஜய் சேதுபதி எப்பவுமே துரதிஷ்டசாலியாக இருக்கிறார். இவர் நினைப்பதற்கு எல்லாம் எதிர் மாறாகவே நடக்கிறது. இரண்டு வேலைகள் செய்யும் இவர் டிரைவராக இருக்கும்போது நயன்தாராவையும், பவுன்சராக இருக்கும்போது சமந்தாவையும் காதலிக்கிறார்.

ஒரு சமயம் இந்த இரண்டு காதலும் பிரச்சனையாக மாற ஆரம்பிக்கிறது. இறுதியில் விஜய் சேதுபதி காதல் போட்டியில் நயன்தாரா, சமந்தா இருவரில் யாருடன் இணைந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Kaathu Vaakula Rendu Kadhal 28th Apr 2022

ஹீரோ விஜய் சேதுபதி சிறிய சிறிய அசைவுகளிலும் முக பாவனைகளிலும் அவரது யதார்த்த நடிப்பைக் காட்டுகிறார். அடக்க ஒடுக்கமான பெண்ணாக நயன்தாராவும் மாடர்ன் பெண்ணாக சமந்தாவும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்கள். மாறன், கிங்ஸ்லி காமெடி ஓரளவு சுவாரஸ்யம்.

இரண்டு காதல் வைத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். படத்திற்கு அனிருத்தின் இசை வழமையான காப்பி மியூஸிக். பாடல்கள் அனைத்தும் சுமாராகவுள்ளது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு உறுதுணையாக இருக்கிறது. மொத்தத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஸ்லோவாக நகரும் காதல்.