தனுஷ்-சிம்பு பட நடிகை ஹிந்தி தான் தேசிய மொழி என கூறிய நடிகருக்கு பதிலடி!
Sudeep, Ajay Devgn, Ramya, Tamil Cinema 28-Apr-2022: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் பிரபல நடிகர் கிச்சா சுதீப்பை பாராட்டும் வகையில் நேற்று ஒரு டுவிட்டை ஹிந்தியில் பதிவு செய்ததற்கு, ‘தனக்கு இந்தி புரியவில்லை என்றும் அனைவருக்கும் புரியும் மொழியில் கருத்து சொல்லுங்கள் என்றும் கிச்சா சுதீப் கூறிஇருந்தார்.

அதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் “இந்தி தேசிய மொழி என்று உங்களுக்கு தெரியாதா? என்று கூறிய அஜய் தேவன், ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்” என கருத்தை முன்வைத்து இருந்தார்.
அஜய் தேவ்கானின் இந்த பதிவு தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நிலையில் பலர் இதற்கு எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தனுஷ் மற்றும் சிம்புவுடன் குத்து மற்றும் பொல்லாதவன் படத்தில் நடித்த நடிகை ரம்யா தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

அதில், ‘இந்தி தேசிய மொழி கிடையாது. இந்தி தேசிய மொழி என்று கூறுவது அஜய்தேவ்கானின் அறியாமை என்றும் ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎப் 2’ போன்ற படங்களின் வெற்றிதான் அவருடைய பிரச்சனைக்கு காரணம் என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ‘உங்கள் படங்களை நாங்கள் ரசித்து பார்ப்பது போல், எங்கள் படங்களையும் நீங்கள் ரசித்துப் பாருங்கள்’ என்றும் ரம்யா கூறியுள்ளார். தற்போது நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.