5 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சிபிராஜ் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Ranga, Sibiraj, Nikhila Vimal, Tamil Movie 28-Apr-2022: தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான சிபி சத்யராஜ் நடித்து நீண்டகாலமாக வெளிவர தாமதமான படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘ரங்கா’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவானது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரு சில காரணங்களால் அவ்வப்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மே 13-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் விஜய் செல்லையா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ராம்ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார்.