நீச்சல் குளத்தில் வித்யூலேகா கொடுத்த ஃபிளையிங் கிஸ் வீடியோ வைரல்!
Vidyullekha Raman, Tamil Cinema 28-Apr-2022: தமிழ் திரையுலகின் காமெடி நடிகையாக வலம் வந்த வித்யூலேகா நீச்சல் குளத்திலிருந்து ரசிகர்களுக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான வித்யூலேகா, விஜய் நடித்த ‘ஜில்லா’ அஜித்தின் ‘வீரம், சூர்யாவின் ‘மாஸ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் கடந்த ஆண்டு சஞ்சய் என்பவரை வித்யூலேகா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல முன்னணியினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வித்யூலேகா தற்போது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்திற்குள் இருந்து ஃபிளையிங் கிஸ் குடுப்பது போல் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.