வெற்றி பட விழா மேடையில் அடுத்த பட அட்வான்ஸ் இயக்குனருக்கு கொடுத்து நெகிழவைத்த கலைப்புலி தாணு!

வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனரின் அடுத்த படத்திற்காக அட்வான்ஸ் கையளித்த தாணு

Mathi Maran, G. V. Prakash Kumar, Kalaippuli S Thanu, Tamil Cinema 28-Apr-2022: அறிமுக இயக்குனர் மதிமாறன் இயக்கிய ‘செல்பி’ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடிய போது அந்த வெற்றி விழா மேடையிலேயே இயக்குநரின் அடுத்தப் படத்திற்கான அட்வான்சை கலைப்புலி எஸ். தாணு கையளித்துள்ளார்.

Mathi Maran, G. V. Prakash Kumar, Kalaippuli S Thanu, Tamil Cinema 28-Apr-2022

அறிமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘செல்பி’. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, இந்த படம் நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்ட போது அந்த வெற்றி விழா மேடையிலேயே கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மதிமாறன் இயக்க வேண்டும் என பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

Mathi Maran, G. V. Prakash Kumar, Kalaippuli S Thanu, Tamil Cinema 28-Apr-2022 001

மேலும் அவர் இந்த விழாவில் கூறியபோது, ‘செல்பி’ இயக்குனர் மதிமாறனை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி என்றும் 38 நாட்களில் இந்த படத்தை சிறப்பாக மதிமாறன் எடுத்துக் கொடுத்ததற்காக அவரை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம் என்றும், இந்த படம் தனக்கு மிகப்பெரிய லாபம் ஈட்டியது என்றும், அதனால் அவருக்கு எங்கள் நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாக 10 லட்சம் ரூபா கொடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.