நீண்ட இடைவெளியின் பின்னர் ஆக்ஷன் படத்தில் இருந்து குடும்ப கதைக்கு மாறும் விஜய்! ரசிகர்கள் ஏற்பார்களா

விஜய்யின் திருப்பம் அவருக்கு கைகொடுக்குமா

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Tamil Cinema 28-Apr-2022: விஜய் தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்பு ஆக்ஷன் படத்தில் இருந்து குடும்ப படத்துக்கு திரும்பி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது அவரின் ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாகவும், விஜய்யின் புதிய திருப்பத்தில் ரசிகர்கள் அவரை காண்பதற்கு ஆவலாகவும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Tamil Cinema 27-Apr-2022

வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 66’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 1ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிகம் பஞ்ச் டயலொக் இல்லாத படமாக ‘தளபதி 66’ இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இன்னும் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 90 ஆம் ஆண்டுகளில் விஜய் முழுக்க முழுக்க ரொமான்ஸ் படங்களில் நடித்து வந்த நிலையில், ‘திருமலை’ என்ற படத்திற்கு பின்னர்தான் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து ‘பீஸ்ட்’ வரை தொடர்ச்சியாக அவர் ஆக்ஷன் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரொமான்ஸ் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதைக்கு மாறுகிறார். இந்த மாற்றம் அவரது திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.