சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் படம்
Avatar, Avatar 2, Tamil Cinema 27-Apr-2022: கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்த படம் 160 மொழிகளில் வெளியாகி வசூலில் உலக சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி உட்பட பல வட இந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் ‘அவதார்’ முதல் பாகம் உலகம் முழுவதும் சுமார் 2850 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்த நிலையில் இரண்டாம் பாகம் முதலாம் பக்கத்தின் சாதனையை முறியடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.