ஹிப் ஹாப் ஆதி வீட்டிற்கு கல் எறிந்த இருவர் கைது! பரபரப்பு தகவல்

நடிகரின் வீட்டிற்கு கல் வீசியவர்கள் கைது

Hiphop Tamizha Adhi, Tamil Cinema 27-Apr-2022: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Hiphop Tamizha Adhi, Tamil Cinema 27-Apr-2022

இவரது வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இவரது வீட்டின் மேல் திடீரென இரு மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அத்தெருவில் உள்ள அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு அறிவித்தனர்.

அதன் பின் அங்கு வந்த கானத்தூர் போலீசாரை பார்த்த மர்ம நபர்கள் காரில் தப்பித்து ஒட்டியுள்ளனர். அதனையடுத்து சிசிடிவியின் உதவியின் மூலம் விசாரணை நடத்தி வந்த போலீசார் காரின் உரிமையாளர் அஜய் வாண்டையாரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் வடபழனியை சேர்த்த பிரேம் குமார் என்றும் மற்றொரு நபர் மதுரை சேர்ந்த அர்ஜுன் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.