கோடிகளில் சம்பளம் வாங்கும் விஜய்யின் முன்னைய சம்பளம்! எஸ்.ஏ. சந்திரசேகர் தகவல்

விஜய்யின் முன்னைய சம்பளம் பற்றிய வியக்க வைக்கும் தகவல்

Vijay, S. A. Chandrasekhar, Tamil Cinema 27-Apr-2022: தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்து அதிகூடிய சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்றும், அவர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் திரையுலக வட்டாரங்களின் தகவல் தெருவிக்கின்றன. ஆனால் விஜய்யின் முதல் சம்பளம் குறித்து தகவலை அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vijay, S. A. Chandrasekhar, Tamil Cinema 27-Apr-2022

தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஹீரோவாக ‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அதற்கு முன்பே எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அந்த வகையில் விஜய் முதல்முறையாக குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய் என சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 500 ரூபாய் சம்பளத்தில் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த விஜய், இன்று சுமார் 100 கோடி சம்பளத்தை நெருங்கி உள்ளது, அவரது உண்மையான உழைப்பும் மற்றும் அவர் சினிமாவின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலும் தான் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.