ராக்கிங் ஸ்டார் யாஷ் மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் வைரல்!

அதிரடி ஹீரோ யாஷ் மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் இணையத்தில்!

Yash, KGF 2, Tamil Cinema 27-Apr-2022: கேஜிஎப் 2 படத்தின் நடிகர் ராகிங் ஸ்டார் யாஷ் தனது மனைவி ராதிகா பண்டிட் அவர்களுக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Yash, KGF 2, Tamil Cinema 27-Apr-2022

யாஷ் நடித்த ‘கேஜிஎஃப்2’ திரைப்படம் இம்மாதம் 14 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, 1000 கோடியை எட்டி செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Yash, KGF 2, Tamil Cinema 27-Apr-2022

இந்த நிலையில் சமீபத்தில் யாஷ் உள்பட படக்குழுவினர்கள் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தின் அதே பகுதியில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தை யாஷ் மனைவி ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Yash, KGF 2, Tamil Cinema 27-Apr-2022 002

அந்த புகைப்படத்தில் யாஷ் தனது மனைவி ராதிகாவுக்கு ஆசையாய் முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்பட பல புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ‘கேஜிஎப் 2’ படத்தை தொடர்ந்து ‘கேஜிஎப் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்றும், இந்த படம் இரண்டாம் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.