‘குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு விஜய்யை பார்க்க உதவிய பிரபல நடிகர்!

விஜய்யை பார்க்க உதவிய நடிகருக்கு நன்றி தெரிவித்த சிவாங்கி!

Vijay, Sivaangi Krishnakumar, Sivakarthikeyan, Beast, Cook With Comali, Cook With Comali 3, Tamil Cinema 27-Apr-2022: விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக அதிகம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. மற்றும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இவர் ஒரு விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Sivaangi Krishnakumar, Sivakarthikeyan, Beast 27-Apr-2022

இந்த நிலையில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலின் படப்பிடிப்பின் போது விஜய்யை சந்திக்க சிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்ததாக தெரியவந்துள்ளது.

Vijay, Sivaangi Krishnakumar, Sivakarthikeyan, Beast 27-Apr-2022

அந்த வகையில், இது குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சிவாங்கி ‘விஜய் சாரை சந்தித்தேன் என்றும்,அவருடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என்றும், இந்த சந்திப்புக்கு எனக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிக்க நன்றி’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

தற்போது விஜய்யை சிவாங்கி சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.