கவர்னர் பெருமைப்படுத்த கூறிய பெரியோர்கள்
Vijay, Ajith Kumar, Tamilisai Soundararajan 27-Apr-2022: புதுச்சேரியில் ‘மகாத்மா காந்தி’ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ‘மகாத்மா காந்தி’ படத்தின் குறுந்தகட்டை வெளியிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது, ‘நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை விட அஹிம்சாவாதி காந்திக்கு கை தட்டுங்கள் என்றும் நடிகர் விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக விடுதலை பெற்றுத்தந்த வ.உ. சிதம்பரம்பிள்ளைக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதற்காக அஜித், விஜய்க்கு கை தட்ட வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும் அவர்களுக்கு கை தட்டுவதை விட அதிகமாக மகாத்மா காந்திக்கும் வ.உ. சிதம்பரம்பிள்ளைக்கும் கைதட்டுங்கள் என்றுதான் நான் கூறுகிறேன் என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில் நடிகர் ராஜேஷ் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.