நீதி மன்றத்தால் சிவகார்த்திகேயன் வழக்கில் பிறப்பித்த புதிய உத்தரவு!

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கிற்கு நீதி மன்றத்தால் புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

Sivakarthikeyan, Don, Ayalaan 26-Apr-2022: கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

Sivakarthikeyan, Don, Ayalaan 26-Apr-2022

அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், “மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்று தர வேண்டும்” எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து, ‘சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பேரில் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும், அதனால் தங்களுக்கு ரூபா 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அபாரதத்துடன் இவ்வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்றும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர் சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்து இவ்விவகாரத்தில் தீர்வுகாண உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து ஞானவேல் ராஜா படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.


Posted

in

by