வெளிவந்துள்ள செல்வராகவன் படத்தின் ட்ரைலர்! கொடூர கொலைகள்

‘உன்னோட சேர்த்து 25 கொலை’ வெளிவந்த வேற லெவல் ட்ரைலர்!

Selvaraghavan, Keerthy Suresh, Saani Kaayidham 26-Apr-2022: செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காயிதம் படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Selvaraghavan, Keerthy Suresh, Saani Kaayidham 26-Apr-2022

கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பிலும், ’24 கொலை செய்துள்ளேன் உன்னோட சேர்த்து 25 வது கொலை’ என கீர்த்தி சுரேஷ் பேசும் அதிரடியான வசனங்களுடன் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது.

மேலும் செல்வராகவன் அவரது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இந்த திரைப்படம் மே 6ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

3 நிமிடம் வரை இந்த டிரைலர் செல்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர், இப்படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை அனைவரின் மத்தியிலும் அதிகரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.