விஜய் ரசிகருக்கு கத்தி குத்து:யாஷ் ரசிகருக்கு துப்பாக்கி சூடு! அதிர்ச்சி தகவல்

பீஸ்ட் – கேஜிஎப் 2 படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

Vijay, Beast, Yash, KGF Chapter 2, Tamil cinema 26-Apr-2022: கடந்த 13 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் 14 ஆம் தேதி யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபமான நிலை.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 15-Apr-2022

இந்நிலையில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த லோகேஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற போது தியேட்டரில் ஒரு கும்பலுடன் சண்டை இட்டுள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக அந்த மர்ம கும்பல் நேற்று பணி முடிந்து லோகேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் குத்தி லோகேஷை கொலை செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து மர்ம கும்பலை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது ‘பீஸ்ட்’ படம் பார்த்த போது ஏற்பட்ட முன்விரோதத்தால் தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதேபோல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘கேஜிஎப் 2’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தவேளை, அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் முன் இருக்கையில் காலை வைத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அந்நிலையில் திடீரென பின் இருக்கையில் இருந்தவர் துப்பாக்கியை எடுத்து முன் இருக்கையில் உட்கார்ந்து இருந்தவரை நோக்கி சுட்டார். இதனால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் துப்பாக்கியால் சுட்டவர் தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஒரே நாளில் ‘பீஸ்ட்’ படம் பார்த்தவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், ‘கேஜிஎப் 2’ படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடும் நடந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.