‘விக்ரம்’ டிரைலர் ரிலீஸில் புதுமையானா புரட்சி! வேற லெவலில் கமலின் திட்டம்

கமலின் புதிய திட்டத்தில் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீடு!

Kamal Haasan, Vijay Sethupathi, Vikram 26-Apr-2022

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை 3 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெறுகிறது.

Kamal Haasan, Vijay Sethupathi, Vikram 26-Apr-2022

இப்படத்தில் கமலை இளமையாக காட்டுவதற்காகவே டிஏஜிங் டெக்னோலஜி என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்காக 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்திய முதல் தமிழ்ப்படம் ‘விக்ரம்’ என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் மே 18 ஆம் தேதி கேன்ஸ் 2022 சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படமொன்றின் ட்ரைலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.